திண்டுக்கல்: திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை சார்பாக புனேவில் உள்ள ROBO LAB TECHNOLOGY நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 35 லட்சம் மதிப்பில் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை கல்லூரி வளாகத்தில் நிறுவியுள்ளது.
ரோபோடிக்ஸ் ஆய்வகம்
ரோபோட்டிக்ஸ் இன்றைய காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம். விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தி புதிய வளர்ச்சியை அடையலாம். கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் நவீனமயமாக்குதல் மற்றும் நீக்குதல் திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. இதேபோல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
இந்த ஆய்வகத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பார்வையிட்டு நேற்று (ஜூலை 27) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.கே ரகுராமன், கல்லூரி முதல்வர் வாசுதேவன், மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அதிஷா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பம் நடைமுறை தொடங்கியது