ETV Bharat / state

’பத்ம விருது’ பெற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் - மாநில அரசின் பத்ம விருது

திண்டுக்கல் : மாநில அரசின் பத்ம விருது பெறத் தகுதியானவர்கள், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Awards
Awards
author img

By

Published : Aug 20, 2020, 8:29 PM IST

இந்திய அரசு சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், வியைாட்டுத்துறை சார்பாக வழங்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பத்ம விருதிற்கான விண்ணப்பம், முக்கிய விவரங்கள் குறித்த தகவல்களை இணையதள முகவரியான www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலினை 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் - 624004 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பம் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மேற்படி கூடுதல் தகவலுக்கு 0451-2461162 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் விவரங்கள் ஆட்சியர் பரிந்துரை அடிப்படையில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈ டிவி பாரத் நேர்காணல்: பூரண சுந்தரி, ஐஏஎஸ் தேர்வானவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.