திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் முடப்பட்டன. தற்போது அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்தது.
அதன்படி தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கோக்கர்ஸ்வாக் பகுதி திறக்கப்படும் என சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருந்தார். அவ்வாறு நகராட்சிக்கு சொந்தமான கோக்கர்ஸ்வாக் பகுதி ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று (செப்.25) திறக்கபட்டது.
முதலில் கோக்கர்ஸ்வாக் ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டுமென சுற்றுலா பயணிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கோக்கர்ஸ்வாக் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் மீண்டும் தள்ளிப்போகும் கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பார்க் திறப்பு!