ETV Bharat / state

தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

திண்டுக்கல்: கிறிஸ்தவ மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

வன்னியர் இளைஞர் சங்கம் புகார்
author img

By

Published : Apr 23, 2019, 7:52 PM IST

இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையின்போது நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நிகழ்ந்த இந்தத் துயர சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ், ஓ சேசப்பா! என்ற தலைப்பை வைத்திருந்தது. இந்த தலைப்பு கிறிஸ்தவ மக்கள் புண்படும் வகையில், ஏளனம் செய்யும் தொனியில் இருந்ததால் தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நேற்றைய செய்தி தலைப்பின் எதிரொலியாக தினமலர் நாளிதழ் இன்றைய செய்தித்தாளில் ஓ சேசப்பா! என்பது இலங்கை வட்டார பேச்சு வழக்கு என விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திண்டுக்கல் 23.4.19

இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் கிறிஸ்தவ மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Body:இலங்கையில் நேற்று முன் தினம் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையின் போது நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலங்கைக்கு நிகழ்ந்த இந்தத் துயர சம்பவத்திற்கு உலக தலைவர்கள் அனைவரும் தங்களது இரங்கலையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஓ சேசப்பா! என்ற தலைப்பை வைத்திருந்தது. இந்த தலைப்பு கிறிஸ்துவ மக்களை புண்படும் வகையில் ஏளனம் செய்யும் தொனியில் இருந்ததால் தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கிறிஸ்துவ வன்னியர் இளைஞர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நேற்றைய செய்தி தலைப்பின் எதிரொலியாக தினமலர் நாளிதழ் இன்றைய செய்தித்தாளில் ஓ சேசப்பா என்பது இலங்கை வட்டார பேச்சு வழக்கு எனவிளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.