ETV Bharat / state

Bogar Jayanthi Festival : பழனியில் களைகட்டிய போகர் ஜெயந்தி விழா! - போகர் ஜீவசமாதி

பழனி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக நடந்த நிலையில், பச்சை மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 18, 2023, 10:19 PM IST

Bogar Jayanthi Festival 2023: திண்டுக்கல்: பழனி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக இன்று (மே 18) கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பழனி முருகன் கோயில் மலை மீதுள்ள நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் ஜீவசமாதி பழனி மலை மீதுள்ள வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் பழனி ஸ்ரீ தண்டபாணி சுவாமியை தரிசிக்க அங்கு செல்லும் லட்சக்கணகானப் பக்தர்கள், போகர் ஜீவசமாதிக்கும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த போகர் ஜீவசமாதியை அவரின் சீடரான புலிப்பாணி சித்தரின் வாரிசுகள் இன்று வரையில் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சித்தர் போகரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மலைமீது உள்ள போகரின் ஜீவசமாதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (மே. 18) நடந்த சித்தர் போகர் ஜெயந்தி விழாவில் சித்தர் போகர் மற்றும் புலிபாணியால் வணங்கப்பட்டு வந்த பழமையான பச்சை மரகத லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழ வகைகள் உட்பட 14 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதினம் ஸ்ரீமத் போகர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரப்படுவதாக கூறப்படும் இந்த போகர் ஜெயந்தி விழாவிற்கு, கோயில் நிர்வாகம் தடை விதிப்பதாக ஏற்கனவே அக்கோயிலின் இணை ஆணையர் நடராஜன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அந்த உத்தரவில், 'போகர் சந்நிதி பூசாரிகள், விதிகளை மீறி, திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், ஆகம விதிகளுக்கு முரணாகவும் தன்னிச்சையாகவும் போகர் ஜெயந்தி விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. இதனால், போகர் சந்நிதியில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் திருவிழா ஏதும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

போகர் சந்நிதி பூசாரிகள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு இடையூறாக செயல்பட்டு வருவதால், வரும் 18ஆம் தேதி அன்றும் அவர்கள் பிரச்னையில் ஈடுபட முகாந்திரம் உள்ளது. அதனால், அன்றைய தினம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பழனி முருகன் இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் இணை ஆணையர் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக புலிப்பாணி ஆசிரம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த மனுவை கடந்த மே 12ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், 'மே 18ஆம் தேதி புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சார்பில், காலை 11 மணி முதல் நண்பகல் இரண்டு மணி வரை போகர் ஜெயந்தி விழா முறைப்படி நடத்தலாம்' என உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து விலைமதிப்பற்ற பச்சை மரகதலிங்கத்திற்கும், போகர் பெருமான் வழிபட்ட புவனேஸ்வரி அம்மன் சிலைக்கும் சிறப்பு அபிஷேக அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றன. இதில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த "பாலகும்ப குருமுணி ஆதினம்" என்பவரது தலைமையில் அந்நாட்டை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட ஆன்மிகக் குழு ஒன்றும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பழனி முருகன் கோயிலுக்கு கோடை விடுமுறை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், அங்கு விற்பனைக்காக டன் கணக்கில் தயாரான பஞ்சாமிர்தம் டப்பாக்கள் கீழ் நிலையத்திலிருந்து, ரோப் கார் பெட்டிகளில் ஏற்றுவதற்காக காத்திருந்தன. ரோப்கார் சேவை காலை 7 மணிக்கு முதல் மதியம் 1:30 மணி வரையிலும் பின்னர் 2.45 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இன்று டன் கணக்கில் குவிக்கப்பட்டதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் சென்று கொண்டிருந்த நிலையில், இன்று ஒரு பெட்டியில் மூன்று பேர் விதம் 12 பேர் மட்டுமே ஒருமுறை பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், பஞ்சாமிர்தம் கொண்டு செல்வதற்காக தனி ரோப் கார் அமைக்கப்பட்டிருப்பினும், பக்தர்கள் செல்லும் ரோப் காரில் கோயில் நிர்வாகம் வருவாய் ஈட்டும் விதமாக பஞ்சாமிர்தங்களை விற்பனை செய்யும் நோக்கில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு பஞ்சாமிர்த பெட்டிகளை மலைக்கோயிலுக்கு கொண்டு செல்வதால், நீண்ட நேரம் பக்தர்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாக்கப்பட்டு வருவதை கோயில் நிர்வாகம் கைவிடவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை - பக்தர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.