திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று, மிதிவண்டியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலையில் நுழைந்தது.
அப்போது அந்தக் கார், திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: