மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் தனது குடும்பத்தாருடன் வேடச்சந்தூர் அருகே உள்ள மஞ்சு வெளியில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்று விட்டு தனது காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது மின்கசிவு ஏற்பட்டு காரில் தீ பற்றத் தொடங்கியது.
உடனே சுதாரித்துக்கொண்ட விஜயகுமார், காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காரில் இருந்த நான்கு பேரும் வெளியேறினர். இதனையடுத்து, காரின் முன்பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பரவத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த, வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.