திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது, திருச்சியிலிருந்து மதுரைக்கு வேகமாக வந்த கார் நேராக பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த சுஜித்லால், ஜெகதீஸ் ஆகிய இருவரும் படுகாயடைந்தனர். பின்னர், உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தின்போது, கார் பள்ளிப் பேருந்தின் பின்புறம் மோதியதால் நல்வாய்ப்பாகப் பேருந்திலிருந்த மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது, இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரண்டு வருடங்களாக காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்த பைக் திருடர்கள் கைது!