மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள், கலைஞர்கள் என பலதரப்பட்டவர்களும் போராடி வருகின்றனர்.
இதனிடையே டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியாக வந்து கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி - முடங்கிய ஹைதராபாத்!
பேகம்பூர் பகுதியிலுள்ள பெரிய பள்ளிவாசல் முன்பாக பேரணியாக தொடங்கிய இஸ்லாமிய மக்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மணிக்கூண்டுப் பகுதியை அடைந்தனர். வழி நெடுகிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களையும், தேசியக் கொடிகளையும் ஏந்தியவாறு இஸ்லாமிய மக்கள் அமைதியாக வந்தனர்.
தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி!
இப்பேரணியில் 200 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய தேசியக் கொடியை நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஏந்தியவாறு இந்தியா எங்கள் தாய்நாடு என்ற முழக்கத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.