ETV Bharat / state

பெரிய கற்களால் பேருந்தை நிறுத்திய இளைஞர்கள் !

author img

By

Published : Jul 24, 2019, 8:55 PM IST

திண்டுக்கல்: பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்தை இளைஞர்கள் பெரிய கற்களை கொண்டு நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

bus

திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் சென்றது. இதனால் பேருந்தினுள் இருந்த பொதுமக்கள் இறங்க முடியாமல் தவித்தபோது சாலையில் வேடிக்கை பார்த்த இளைஞர்கள் சமயோசிதமாக பெரிய கற்களை சக்கரங்களுக்கு அடியில் போட்டு பேருந்தை நிறுத்தினார்கள்.

பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து

பின்னர் பேருந்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக இறங்கி சென்றனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது போன்ற பேருந்துகளை கண்டறிந்து இயக்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினர். மேலும், அரசுப் பேருந்துக்கே இதுபோன்ற நிலை இருப்பது தெரியாமல் போக்குவரத்துக் கழகம் என்ன செய்கிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Intro:திண்டுக்கல் 24.07.19

திண்டுக்கல்லில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் வேடிக்கை பார்த்த இளைஞர்கள் பெரிய கல்களை கொண்டு பேருந்தை நிருத்திய அவலம்.Body:திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் சென்றது. இதனால் பேருந்தினுள் இருந்த பொதுமக்கள் இறங்க முடியாமல் தவித்த போது வேடிக்கை பார்த்த இளைஞர்கள் சமயோசிதமாக பெரிய பெரிய கல்களை டையர்களுக்கு அடியில் போட்டு பேருந்தை நிறுத்தினர். பின்னர் பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கி சென்றனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் சாலைகளில் ஒருவதற்கு உகந்த நிலையில் இல்லாத பேருந்துகளை அரசு கண்டறிந்து இயக்குவதை தவிர்க்க வேண்டும். தற்போது இந்த பேருந்தின் நிலை சில மணி நேரமாக வாட்சப், பேஸ்புக் மூலம் வைரலாக பரவி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.