ETV Bharat / state

பழனி அருகே எரிந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலம்; போலீசார் விசாரணை! - Burnt body found in Palani

Burnt body found in Palani: பழனி அருகே உடல் எரிந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Burnt A old Mans body found near Palani
பழனி அருகே எரிந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:42 AM IST

பழனி அருகே எரிந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலம்

திண்டுக்கல்: பழனியை அடுத்த கொத்தனார் காலனியை சேர்ந்தவர் துரைசாமி(60). கடந்த சில தினங்களாக துரைசாமி வீட்டிற்கு செல்லாத நிலையில் உறவினர்கள் பல இடங்களில் இவரை தீவிரமாகத் தேடிவந்துள்ளனர். இந்நிலையில் கொத்தனார் காலனி அருகே அடையாளம் தெரியாத உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, எரிந்த நிலையில் இருந்த உடல் முதியவர் துரைசாமி என தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காணமல் போனதாக முதியவர் துரைசாமி தேடப்பட்டு வந்தநிலையில், அவரை யாரேனும் கொலை செய்து எரித்துள்ளனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் உடல் எரிந்து நிலையில் கிடந்த சம்பவம் கொத்தனார் காலனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு செய்த கணவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.