ETV Bharat / state

உடைந்து போன பாலத்தில் தவறி விழும் சிறுவர்கள் - பதற்றத்தில் பெற்றோர்கள்! - bridge damage public accident

திண்டுக்கல்: அரசமரத்துப்பட்டியில் சேதமடைந்த சிமென்ட் பாலத்தை சரி செய்யக் கூறி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

bridge damage
author img

By

Published : Oct 12, 2019, 4:59 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அருகேயுள்ளது அரசமரத்துப்பட்டி. இங்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடை சிமென்ட் பாலம் ஒன்று ஓராண்டிற்கு முன்பு சேதம் ஏற்பட்டது.

பாலம் சிதிலமடைந்து சீரமைக்கப்படாததால் அடிக்கடி சிறுவர்கள் எதிர்பாராத வண்ணம் விழுவதும், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் வழக்கமாகி வருகிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி செயல் அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.

உடைந்துபோன பாலம்

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் சேதமடைந்த பாலம் வழியாக சென்றபோது விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என அரசமரத்துப்பட்டி கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:

முக மலர்ச்சியுடன் தமிழ் மண்ணிலிருந்து புறப்பட்ட ஜி ஜின்பிங்!

Intro:திண்டுக்கல் 12.10.19

சாலையின்நடுவே உடைந்து போன பாலத்தில் தவறி விழும் சிறுவர்கள். Body:திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் உள்ள அரசமரத்துப்பட்டி. இங்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிமெண்ட் பாலம் ஒன்று ஓராண்டிற்கு முன்பு சேதம் ஏற்பட்டது. பாலம் சிதிலமடைந்து சீரமைக்கப்படாததால் அடிக்கடி சிறுவர்கள் எதிர்பாராத வண்ணம் விழுவதும், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் வழக்கமாக உள்ளது.

இது குறித்து பலமுறை பேரூராட்சி செயல் அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையென பொதுமக்கள் கூறுகிறார்கள். மேலும் கடந்த இருதினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெறுவதாகவும் கூறுகிறார்கள். எனவே இந்த பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் சாலைமறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.