திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேவுள்ள மூஞ்சிக்கல் பகுதியில் திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பெண்களை இழிவாக பேசியதற்காக தமிழ்நாடு அரசு திருமாவளவனை கைது செய்ய வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தை கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
திருமாவளவனுக்கு கைக்கூலியாக திமுக செயல்படுகிறது என கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து திருமாவளவனின் உருவப்படம் கிழிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட பாஜாகவினரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.