திண்டுக்கல் குடை பாறைப்பட்டியில் பாஜக திண்டுக்கல் மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இரு சக்கர வாகன விற்பனை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது அலுவலகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவற்றை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதனை கண்டித்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் திண்டுக்கல் - வத்தலகுண்டு மெயின் ரோட்டில் இன்று (செப் 24) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.
அப்போது வாகனங்களுக்கு தீ வைத்தவர்களை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியினருக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்ததும், அடுத்தடுத்து தமிழ்நாட்டில் உள்ள சில பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பின்னணி என்ன? - முழு விவரம்