திண்டுக்கல்: நத்தம், சாணார்பட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மா விளைச்சலுக்கேற்ற மண் வகைகள் இருப்பதால், இங்கு விளையும் மாம்பழங்கள் நல்ல ருசியாக இருக்கும்.
மார்ச் முதல் ஜூலை வரை சீசன் இருக்கும். இந்தாண்டு சீசனையொட்டி மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், மாங்காய் பெரிய அளவில் உருவாவதற்கும் தேவையான பராமரிப்புப்பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பூச்சி மருந்தால் பலியாகும் தேனீக்கள்
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தடுக்க பெரும்பாலான விவசாயிகள் ரசாயனப் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் நத்தம், சாணார்பட்டியில் மாம்பூக்களில் தேன் சேகரிக்க செல்லும் தேனீக்கள் பூச்சி மருந்துகளின் நச்சுத் தன்மையால் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றன.
அரசிற்கு கோரிக்கை
எனவே, மாமரங்களுக்கு ரசாயனப்பூச்சி மருந்து தெளிப்பதைத் தடுக்க வேண்டும் என அரசிற்கு தேனீக்கள் வளர்க்கும் குணசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்