திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள டிஐஜி அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானம் நுழைவுவாயிலில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், சிசிடிவி கேமராவின் இணைப்பைத் துண்டித்து விட்டு, பின்னர் உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரத்தின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இந்தச்சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் டிஐஜி அலுவலகம் அருகில் நடந்த இந்தத் திருட்டு முயற்சி சம்பவமானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லிஃப்டில் சிக்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழ்