ETV Bharat / state

TENT HOUSE: கொடைக்கானல் சுற்றுலா போறீங்களா? அப்போ அவசியம் இத பண்ணாதீங்க மக்களே!

அரசின் தடையை மீறி டென்ட் அமைத்தால் நில உரிமையாளர்கள், டென்ட் அமைப்பவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனுமதியின்றி தங்கும் விடுதிகள் நடத்துவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் எனக் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கொடைக்கானல் சுற்றுலா போறீங்கள?
கொடைக்கானல் சுற்றுலா போறீங்கள?
author img

By

Published : Nov 23, 2021, 6:12 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் முக்கியச் சுற்றுலாத்தலம் இருந்துவருகிறது. கொடைக்கானலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள்.

இந்நிலையில், இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைக் கண்டு ரசித்து சில பல நாள்கள் தங்கிச் செல்வர்கள். தற்போது கொடைக்கானலில் தங்குவதற்கு புதுவிதமாக டென்ட் கலாசாரம் அதிகரித்துள்ளது.

உயிருக்கும் ஆபத்து

இந்த டென்ட் அமைப்பதில் இருக்கும் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். பட்டா நிலங்கள், வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் டென்ட் அமைப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழலும் இருந்துவருகிறது.

கொடைக்கானல் சுற்றுலா போறீங்களா?

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 22) செய்தியாளரைச் சந்தித்த கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், "தமிழ்நாடு அரசால் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்ட் அமைப்பதற்குத் தடையானது இருந்துவரும் சூழலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் தங்கும் விடுதிகள் நடத்துவோர் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்துவருகின்றனர்.

விளம்பரங்களைக் கண்டு

டெண்ட்  ஹவுஸ்
டென்ட் ஹவுஸ்

இதனால், சமூக வலைதளங்களில் விளம்பரங்களைக் கண்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டென்ட், கண்டைனர் ஹவுஸ் ஆகியவற்றில் தங்குகின்றனர். தொடர்ந்து வருவாய்த் துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தாலும், இதனைத் தடுப்பதற்கு முடியாமல் இருந்துவருகிறது.

சட்டரீதியாக நடவடிக்கை பாயும்

கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன்
கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்

அரசின் தடையை மீறி டென்ட் அமைத்தால் நில உரிமையாளர்கள், டென்ட் அமைப்பவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதியின்றி தங்கும் விடுதிகள் நடத்துவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும்" எனக் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Rowdy baby surya-வைக் கைது செய்... இளம்பெண் குமுறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.