திண்டுக்கல் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெட்டியார்சத்திர ஊராட்சி ஒன்றியம் சார்பில் மாணவர்கள் மூலமாக பல்கலைக்கழக வளாகத்தில் அடர்வனம் உருவாக்கும் நோக்கில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜய் சந்திரிகா, பல்கலைக்கழக முனைவர் S. சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் NSS, YRC மாணவ மாணவிகளுடன் இணைந்து பல மாணவர்களும் மரக்கன்றுகளை ஆர்வமாக நட்டனர். மேலும் 3,000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜய் சந்திரிகா தெரிவித்தார்.