இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிஆர். சரஸ்வதி கலந்து கொண்டுபேசினார்.
அவர் பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல் தினத்தன்று எந்த ஒரு உதவியும் செய்யாத இந்த எடப்பாடி அரசு இன்று ஓட்டுக்காக பொங்கல் அன்று குடும்பத்திற்கு ரூபாய் 1000 வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது.
மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் இந்த அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஜோதிமுருகன் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.