ETV Bharat / state

உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக பண்ணைக்காடு அழகர்சாமி தேர்வு - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக பண்ணைக்காடு அழகர்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக பண்ணைக்காடு அழகர்சாமி தேர்வு

author img

By

Published : Nov 20, 2020, 1:53 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் பண்ணைக்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிறந்தவர் அழகர்சாமி. தற்போது இவர் உலக அளவில் பார்மசி துறையில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அழகர் சாமி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் பயின்ற பின்னர், இவர் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் டிப்ளமோ, பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத் எம்.என்.ஆர் பார்மசி கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல்வராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக பண்ணைக்காடு அழகர்சாமி தேர்வு

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், சமீபத்தில் 22 துறைகளில் உலகின் சிறந்த ஒரு லட்சம் விஞ்ஞானிகளை பட்டியலிட்டது. அதில் அழகர்சாமி 1398ஆவது இடத்தில் உள்ளார். மேலும் 117 ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் முதல் இடத்திலும், இந்திய அளவில் 22ஆவது இடத்திலும் தேர்வாகி உள்ளார்.

குறிப்பாக அழகர்சாமி புதிய மருந்துகளை தயாரித்து, அவற்றை விலங்குகள் மீது பரிசோதித்து வருகிறார். இவரிடம் பயின்ற மருந்தாளுநர்கள், உலக அளவில் பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

இதையும் படிங்க: உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.