திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ரா.விசுவநாதன், மேற்கு மாவட்ட செயலாளராக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி இன்று (ஜூலை30) அவர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அதனால் இருவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள் அதிகமான நான்கு சக்கர வாகனங்களில் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்படாமல் அதிகமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரயில் நிலையம் முன் திரண்ட தொழிலாளர்கள்: காற்றில் பறந்த சமூக விலகல்!