திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒன்றியத் தலைவருக்கான தேர்தலில் திமுக கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதிமுக 6 இடங்களிலும் சுயேச்சை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த ஒன்றாவது வார்டு உறுப்பினரான அருணா, 18ஆவது வார்டு உறுப்பினரான பார்வதி ஆகியோர் காணாமல்போனதால் அதிமுகவினர் புகார் எழுப்பினர். அவர்கள் இன்றி இன்று நடைபெற்ற திண்டுக்கல் ஒன்றியச் செயலாளருக்கான தேர்தல் சட்டவிரோதமானது எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர். மேலும் காணாமல்போன இரு உறுப்பினர்களையும் கண்டுபிடித்த பின்னரே மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுகவினர் மாவட்ட கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் இது தொடர்பாக விசாரிப்பதாகத் தெரிவித்தார். முன்னதாக, அதிமுகவினர் தேர்தல் நடத்தவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி திமுகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'அரசியல்வாதிகள் என்னைப் போல் இருக்க வேண்டும் '- கமல்ஹாசன்