ETV Bharat / state

கொடைக்கானல் சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல ஒரே நுழைவுக் கட்டணம் வசூல்: பலர் அதிருப்தி - Dindigul district

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளுக்கு ஒரே நுழைவுக் கட்டணம் வசூல் செய்து வருவதாக வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 15, 2023, 6:53 PM IST

சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல ஒரே நுழைவுக் கட்டணம் வசூல்

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் பிரதான சுற்றுலா இடங்களாக மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள், பூம்பாறை எனப் பல்வேறு இடங்கள் பார்ப்பதற்கு இருந்து வருகிறது. இந்த சுற்றுலாப் பகுதிகளுக்கு வனத்துறை மூலமாக அந்தந்த இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தற்போது வனத்துறை மூலமாக மோயர் சதுக்கம் சோதனைச் சாவடியில் தற்போது ஒரே நுழைவு கட்டணம் என்ற அடிப்படையில் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நுழைவுக்கட்டணமானது பெரியவர்களுக்கு 30 ரூபாயும் சிறியவர்களுக்கு 15 ரூபாயும் கேமராவிற்கு 50 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டண நடைமுறையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வற்புறுத்தி நுழைவுச்சீட்டினை வனத்துறை கொடுத்து வருவதாகவும்; இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வனத்துறை கட்டண கொள்ளைவில் ஈடுபட்டு வருவதாகவும் சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சுற்றுலாப் பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகள் இன்றி இவ்வாறாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பழைய கட்டண நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என வனத்துறைக்கும், தமிழ்நாடு அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.