திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் - பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் காவேரியம்மாபட்டி அருகே நங்கஞ்சி ஆற்றுவழியே கீழே பாலம் அமைப்பதற்காக ஹிட்டாச்சி வாகனம் ஒன்று பணியில் ஈடுபட்டிருந்தது. அந்த வாகனத்தை திருப்பதி என்பவர் இயக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஹிட்டாச்சி வாகனத்தில் டீசல் டேங்க் வயர் பழுது ஏற்பட்டு தீப்பிடிக்கத்தொடங்கியது. இதுகுறித்து ஹிட்டாச்சி வாகன ஓட்டுநர் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஹிட்டாச்சி வாகனத்தில் பற்றி எரிந்த தீயை சுமார் 45 நிமிட போராட்டத்திற்குப் பின்பு முற்றிலுமாக அணைத்தனர்.
இந்நிலையில் ஹிட்டாச்சி வாகனம் முற்றிலும் எரிந்த நிலையில் அந்த வாகனத்தை இயக்கிய திருப்பதி நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Video:நில உரிமையாளரைத்தாக்கி ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற திமுக ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர்