திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகேவுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி (55). இவர், ஊர் ஊராக சென்று குறி பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 6 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 10-குழந்தைகள் உள்ளது. அவரது ஆவது மகன் அஜித் (22). இவரும், தனது தந்தையின் தொழிலயே செய்து வருகின்றார். இந்நிலையில் மகன் அஜித் இன்று (ஆக. 27) மாலை உசிலம்பட்டியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டிலிருந்த தந்தை அந்தோணியுடன் குடிபோதையில் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருகே இருந்த கத்தியால் தந்தை அந்தோணியை அஜித் குத்தியுள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த தந்தை அந்தோணி காயத்துடன் மகனை எட்டி உதைத்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்த மகனின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி மகனை சராமாரியாக குத்தியுள்ளார்.
இதனால், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அஜித் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிது சம்பவ இடத்திற்கு விரைந்த நிலக்கோட்டை காவல் துறையினர், அஜீத் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே படுகாயமடைந்த தந்தை அந்தோணியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நிலக்கோட்டை காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Viral Video - பானிபூரி கடையில் லஞ்சம் வாங்கிய தாம்பரம் உதவி ஆய்வாளர்