திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டெருமை, பன்றி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான செட்டியார் பூங்கா அருகே சுகந்தி என்பவர் தனது வீட்டில் 10 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இரவு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்ட ஆடுகளை மறுநாள் காலை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆடுகள் சிறுத்தையால் தாக்கப்பட்டதா இல்லை வேறு ஏதும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 1951 முதல் தேர்தலையே சந்திக்காத கிராமம்!