டெல்லி சமயக் கூட்டத்தில் பங்கேற்று திண்டுக்கல் திரும்பிய 65 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த 96 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்த நிலையில் கரோனா சிகிச்சைப் பெற்றுவந்த திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் நேற்று (ஏப்ரல் 16ஆம் தேதி) குணமடைந்தனர். அதையடுத்து அவர்களை அலுவலர்கள் தனிவாகனங்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அவ்வாறு வீடு திரும்பிய அவர்களை, அவர்களது உறவினர்கள் பூத்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள்: கரோனா பரவும் அபாயம்!