ETV Bharat / state

மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 190 கிலோ கிராம் குட்கா பறிமுதல்!

திண்டுக்கல்: சாணார்பட்டி அடுத்துள்ள அதிகாரிபட்டியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட 190 கிலோ கிராம் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

gutka seized in dindugul
author img

By

Published : Nov 13, 2019, 8:50 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு காவல் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அதன்பேரில் தனிப்படை காவல் துறையினர் சாணார்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அதிகாரிபட்டியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனை செய்தபோது, 13 மூட்டைகளில் சுமார் 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 190 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பதுக்கி வைத்த குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் கடை உரிமையாளர் ஜேம்ஸ் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

குடும்பத் தகராறு காரணமாக வெவ்வேறு இடங்களில் மூவர் கொலை...!

Intro:திண்டுக்கல் 13.11.19

சாணார்பட்டி அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 190 கிலோ குட்கா பறிமுதல்.

Body:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள அதிகாரிபட்டியில் உள்ள மளிகை கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட 190 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார் வந்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சாணார்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிபட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது 13 மூட்டைகளில் சுமார் 88000 ரூபாய் மதிப்பிலான 190 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பதுக்கி வைத்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் ஜேம்ஸ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.