திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மூலச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை எதிரே இயற்கையாக எண்ணெய் தயாரிக்கும் கடையை நடத்தி வருகிறார் பாலச்சந்திரன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். கடந்த 14ஆம் தேதி மூலச்சத்திரத்தில் உள்ள தனது எண்ணெய் தயாரிக்கும் கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இதனிடையே அங்குவந்த இரண்டு நபர்கள் செல்போன் பேசுவதுபோல் நடித்து வாகனத்தின் சாவி ஓயரை துண்டித்து இருசக்கர வாகனத்தை அசால்டாக திருடிச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பாலச்சந்திரன், வாகனம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அங்கு வந்த காவலர்கள் திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களைத் தேடிவருகின்றனர். பட்டப்பகலில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளை முயற்சி