ETV Bharat / state

தருமபுரியில் நீர்த்தேக்க தொட்டியில் சிறுநீர் கழித்த இளைஞர்கள்.? பொதுமக்கள் குற்றச்சாட்டு - Okanagan Joint Water tank in dharmapuri

தருமபுரி மாவட்டம் சிவாடி ஊராட்சியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் நீர்த்தேக்க தொட்டியில் சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
பொதுமக்கள் குற்றச்சாட்டு
author img

By

Published : Apr 1, 2023, 3:17 PM IST

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் 5 கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மேல்நிலை நீா்தேக்க தொட்டி அமைந்துள்ளது. முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர் தேக்க தொட்டி சுமார் 60 அடி உயரத்தில் உள்ளது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

நேற்று இரவு 3 இளைஞர்கள் இந்த மேல்நிலை தொட்டியின் மீது அமர்ந்து மது மற்றும் கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. இந்த இளைஞர்கள் நீர்த்தேக்க தொட்டியின் மீது அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள், இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து கீழே இறக்கியுள்ளனா்.

இதனிடையே கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் குடிநீா் தொட்டியில் சிறுநீா் கழித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உடனடியாக குடிநீர் விநியோகத்தை நிறுத்தினார்.

அதோடு தண்ணீரை சோதனைக்கு உட்படுத்த சேகரித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த நீர்த்தேக்க தொட்டில் இருந்த அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு முழுவதையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், பாளையம் வருவாய் அலுவலர் ருக்மணி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கும் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 2 இளைஞா்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.

இதையும் படிங்க: குளு குளு குளியல்.. மவுத்தார்கன் இசை.. திருச்சியில் யானைகள் செய்த சேட்டை வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.