தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் பகுதியில் செல்லும் ரயில் பாதை அருகில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் துண்டான நிலையில் இருப்பதாக தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தர்மபுரி நகர காவல் துறையினர் ரயில் பாதையின் அருகில் இருந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் சின்னவன் என்பவரது மகன் ராஜ்குமார் (28) எனத் தெரியவந்தது.
உடலைக் கைப்பற்றிய தர்மபுரி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து இளைஞரின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.