கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 வயது பள்ளி மாணவியான தங்களது மகள் மாடு மேய்க்கச் சென்றபோது அடையாளம் தெரியாத ஆட்கள் சிலர் அவரைக் காரில் கடத்தியதாக, மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் துறையில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து காரிமங்கலம் காவல் துறையினர் இவ்வழக்கை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். தொடர்ந்து, பள்ளி மாணவியைக் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட சக்திவேல் (வயது 22) என்ற நபரைக் கண்டறிந்து பாலக்கோடு மகளிர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (அக்.20) சக்திவேலைக் கண்டறிந்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.