ETV Bharat / state

காவிரி நீரை நிலக்கடலைக்கு பயன்படுத்திய அஜித்! - first time

தருமபுரி: ஒகேனக்கல் அருகே இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றின் கரையோத்தில் வந்து கொண்டிருந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினார் .

WATER
author img

By

Published : Aug 13, 2019, 4:14 AM IST

ஒகேனக்கல் அடுத்துள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீர் அஜித்தின் நிலத்தின் அருகே உள்ள நிலங்களில் புகுந்து காணப்பட்டது.

Young man  இளைஞன்  காவிரி நீர்  விவசாயம்  first time  cauvery water
நிலக்கடலை செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில்

அதை தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை செடிக்கு பயன்படுத்தும் வகையில் கால்வாய் அமைத்து தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார். காவிரி ஆற்றில் எத்தனை லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும், அதை தருமபுரி மாவட்ட மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.

காவிரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்திய இளைஞன் அஜித்குமார்

இந்நிலையில், இந்த இளைஞன் வாடிய நிலையில் இருந்த செடிக்கு காவிரி நீரைக்கொண்டு வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Intro:tn_dpi_01_3lak_water_agriwork_vis_7204444

Body:tn_dpi_01_3lak_water_agriwork_vis_7204444

Conclusion:

3 லட்சம் கனஅடி நீரில் விவசாயப் பணியை மேற்கொள்ளும் இளைஞன் வைரல் வீடியோ......

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை ராணிப்பேட்டை பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் சுமார் 3லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக ராணிப்பேட்டை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. விவசாயிகள் பயிரிட்டு இருந்த நிலக்கடலை, ஆரியம், சோளம், போன்ற பயிறு வகைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞன்   தங்களது நிலத்தில் பயிரிட்டு இருந்த நிலக்கடலை செடிக்கு தண்ணீரை தங்கள் நிலத்தோடு பரவி வந்த 3 லட்சம் கனஅடி தண்ணீரில் கால்வாய் அமைத்து நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தார்.பரந்து விரிந்து ஓடிய காவிரி ஆற்றில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உடமைகளை வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த சூழ்நிலையில் இந்த இளைஞன் வாடிக் கிடந்த நிலக்கடலை செடிக்கு தங்கள் நிலத்திற்கு அருகில் வந்த காவிரி நீரை வாய்க்கால் அமைத்து பாய்ச்சிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் எத்தனை லட்சம் கன அடி தண்ணீர் சென்றாலும் அவை தர்மபுரி மாவட்ட மக்களுக்கு பயன் படாது காரணம் தர்மபுரி மாவட்டம் நிலப்பரப்பு உயர்வாகவும் காவிரி ஆறு தாழ்வாகவும் உள்ளதால் இந்த நீரை பயன்படுத்த முடியாது.தற்போது அதிக அளவு தண்ணீர் வருவதால் கரையோரம் உள்ள மக்கள் முதன் முறையாக இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.