ETV Bharat / state

பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது! - பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் கைது

தர்மபுரி: அரூர் அருகே 11ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது!

author img

By

Published : May 29, 2021, 3:40 PM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த மே 24ஆம் தேதி காணாமல் போனார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அரூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் கொடுத்தனர்.

மேலும், தனது மகளை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (23) என்ற இளைஞர் கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், சிலம்பரசன் மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் சென்ற காவல் துறையினர், சிலம்பரசனுடன், காணாமல் போன மாணவியும் உடனிருந்ததை கண்டறிந்தனர். பின்னர், இருவரையும் அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிலம்பரசன் மாணவியை கடத்திச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிலமபரசன் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.