தர்மபுரி: கேரள சமாஜத்தின் 21ஆவது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் செய்யும் விழா விஜயதசமி தினமான இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கேரளா மாநிலம், கண்ணூர் விஷ்ணு நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நடத்தினா். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்தனர்.
பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்டத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தர்மபுரி மாவட்டம் இன்னும் தொழில்துறையில் முன்னேறவில்லை - எம்.எல்.ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் வேதனை