தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் தனியார் நிதிநிறுவனங்களில் கெடுபிடி வசூல் அச்சுறுத்தல்போக்கினை கண்டித்து ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் தனியார் நுண் நிதிநிறுவனங்களில் வியாபாரம் செய்ய சிறு பெட்டிக் கடை, பலகாரக் கடை உரிமையாளர்கள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய்வரை கடன் பெற்று 12 மாதங்களில் 6 சதவீதம் முதல் 14 சதவீதம் வட்டியுடன் செலுத்தவேண்டிய நிலையுள்ளது.
15 தினங்களுக்குள் அசலும், வட்டியும் செலுத்தவில்லை எனில்நுண் நிதி நிறுவனத்தினர் கெடுபிடி வசூல்செய்வது, பெண்களை மிகக் கேவலமாகப்பேசுவது போன்ற போக்கு தொடர்கிறது.
கரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடம் பாதிப்பு காலத்தில் அசலும், வட்டியும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தும், தனியார் நிதி நிறுவனங்கள் பெண்களை மிரட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில்மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்னயை தீர்த்து வைத்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகாரளித்தும் அச்சுறுத்தல் தொடர்கிறது.
அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆா்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.