தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கோடைகாலத்தில் உணவு, தண்ணீர் தேடி ஒகேனக்கல் சாலை வழியாக காட்டு யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சாலையைக் கடந்துசெல்கின்றன.
வழக்கமாக மாலை 3 மணி முதல் 4.30 மணி அளவில் யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்துவருகின்றன. இந்நேரத்தில் பென்னாகரம் பகுதியிலிருந்து ஒகேனக்கல் நோக்கி பயணம் செய்யும் நபர்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் சில இளைஞா்கள் யானைக்கு அருகே இருந்து செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனா்.
கோடைகாலத்தில் முகாமிட்டுள்ள யானைகள் பொதுமக்களைத் தாக்காத வகையில் யானைகள் கடக்கும் பகுதியில் வனத் துறை சார்பில் வனக் காப்பாளர்களை நியமனம்செய்து பொதுமக்கள் சாலையைக் கடக்கும்போது கவனமாகக் கடந்துசெல்ல அறிவுரை வழங்கி, பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் யானைகள் கடக்கும் நேரங்களில் போக்குவரத்தை நிறுத்தி யானைகள் கடந்த பிறகு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல்: கரோனா நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு