தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடுபட்டி கீழ் சக்கில் நத்தம் பகுதியில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. அத்துடன் கம்பு, சோளமும் பயிரிப்படுகின்றன.
கீழ் சக்கில் நத்தம் பகுதி காட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் காட்டுப்பன்றிகள் இரவில் நிலக்கடலை செடிகளை நாசப்படுத்திவிட்டுச் செல்கின்றன.
இதுகுறித்து விவசாயி லோகுதேவன் என்பவர், "5 ஏக்கர் நிலப்பரப்பில் கம்பு, சோளம், நிலக்கடலை விவசாயம் செய்துவருகிறேன். அவற்றை காட்டுப்பன்றிகள் தினமும் இரவில் நாசப்படுத்துகின்றன. அதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத் துறையினர் உடனடியாக காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: பன்றிகளை உயிருடன் புதைத்த விவசாயிகள்!