ETV Bharat / state

மனைவி கொன்று எரித்த வழக்கு! கணவன் உள்பட இருவர் கைது - two arrested

தருமபுரி: காரிமங்கலம் அருகே, டீ குண்டு பகுதியில் மனைவியை கொன்று எரித்த வழக்கில் கணவன் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மனைவி கொலை
author img

By

Published : Aug 9, 2019, 7:30 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த டீ குண்டு பகுதியில் கடந்த ஜூன் 28ஆம் தேதி எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் கௌரம்மா (40) என்பதும் நேனாமங்கலா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணையில் அவரது கணவர் லோகேஷ் குழந்தை இல்லாத காரணத்தால் கௌரம்மாவை நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்துள்ளார்.

காரில் வந்து செல்லும் காட்சி

விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கௌரம்மாவிற்கு ஜீவனாம்ச தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் லோகேஷ் அந்தத் தொகையைத் தராமல் இருந்ததால், சில மாதங்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கணவர் லோகேஷ் தான் நிலத்தை விற்று ஜீவனாம்சமாக முழுத் தொகையும் கொடுப்பதாகக் கூறி அவரை நிலமங்கலம் பாலம் அருகே வரழைத்து புடவையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி காரில் காரிமங்கலம் கொண்டுவந்து எரித்துள்ளார். இவர்கள் காரில் வந்து செல்லும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, காவல் துறையினர் லோகேஷ், அவரது நண்பர் அனுமந்தப்பா ஆகியோரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Intro:tn_dpi_01_crime_news_img_vis_7204444Body:tn_dpi_01_crime_news_img_vis_7204444Conclusion:பெண் சடலம் மீட்பு விவகாரத்தில் இருவர் கைது காரிமங்கலம் போலீஸார் அதிரடி. தர்மபுரி மாவட்டம்காரிமங்கலம் அடுத்த டீ குண்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எரிந்த நிலையில் ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இவ்விசாரணையில் இறந்த பெண் கௌரம்மா ( 40) நேனாமங்கலா பகுதியைச் சார்ந்தவர் என்றும் கண்டறிந்தனர். விசாரணையில் அவரது கணவர் லோகேஷ் குழந்தை இல்லாத காரணத்தால் கௌரம்மாவை நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கௌர ம்மாவிற்கு ஜீவனாம்ச தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை சில ஆண்டுகளாக ஜீவனாம்சம் கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் தான் நிலத்தை விற்று முழு தொகையும் செட்டில் செய்வதாக கெளரம்மா அழைத்து தலையில் பலமாக தாக்கி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு காரிமங்கலம் டிகுண்டு பகுதியில் வீசியுள்ளார்.இவர்கள் காரில் வந்து சடலத்தை வீசிவிட்டு தீ வைப்பது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை தொடர்ந்து காரிமங்கலம் போலீஸார் லோகேஷ் மற்றும் அவரது நண்பர் அனுமந்தப்பா கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். புகைப்படம் உயிரிழந்த பெண்ணின் புகைப்படம்.சற்று வயது அதிகமாக இருப்பது போன்ற தெரியக்கூடிய புகைப்படம் லோகேஷ். இளமையாக இருப்பவர் அனுமந்தப்பா
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.