தர்மபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிமுக மற்றும் திமுகவினர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு குறித்து முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பேசும்போது,
’ஆளுகின்ற திமுக அரசின் ஒரு சில குண்டர்கள் கடுமையாக அதிமுகவினர்களைத் தாக்கி இருக்கிறார்கள். அதிமுகவினர் தான் திமுகவினரை தாக்கியதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மைக்குப் புறம்பான செய்தி. சா்க்கரை ஆலையில் சமீபத்தில், பாய்லரை சூடேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
அதைப்போல இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக நடக்கக்கூடாது என்பதற்காக செய்த அராஜகத்தினால் நடக்கக் கூடாத ஒரு சம்பவம் நடந்தது. அதிமுகவினர் என்றும் அராஜகப் போக்கிற்கு சென்றவர்கள் இல்லை’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்!