ETV Bharat / state

பரம்பரை, கொள்கை பகைவர்களை இத்தேர்தலில் சந்திக்கவுள்ளோம்- அதிமுக, பாஜகவை விளாசிய கனிமாெழி - கனிமொழி எம்பி

பரம்பரை, கொள்கை பகைவர்களை இந்தத் தேர்தலில் சந்திக்கவுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுகவை வெற்றிபெறச்செய்ய திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

we face Policy enemies in upcoming election says kanimozhi mp
கொள்கைப் பகைவர்களை இந்தத் தேர்தலில் சந்திக்கவுள்ளோம்- கனிமொழி
author img

By

Published : Feb 15, 2021, 6:42 PM IST

தர்மபுரி: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு தர்மபுரி சட்டப்பேரவை தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவை எதிர்த்து திமுக தேர்தலைச் சந்தித்து வருகிறது.

எல்லா வளமும் பொருந்திய பாஜக, மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களையும் அதிமுகவின் பின்னணியில் நிறுத்தி, தங்களின் முகமாக அதிமுகவை நிறுத்தியுள்ளது. பரம்பரைப் பகை, கொள்கை பகையாளிகளை எதிர்த்து திமுக தேர்தலைச் சந்திக்கிறது. சுயமரியாதை, சமுகநீதி, திராவிட இயக்க கொள்கைகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களைத் தேர்தலில் சந்திக்கப்போகிறோம்.

கொள்கை பகைவர்களை இந்தத் தேர்தலில் சந்திக்கவுள்ளோம்- கனிமொழி

அதிமுக என்பது பினாமி ஆட்சி. ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய அனைவரும் பாடுபடவேண்டும். இந்தத்தேர்தலில் திமுகவை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறச்செய்யவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மட்டும்தான் வெற்றிநடை போடுகிறார் - கனிமொழி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.