கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள யாரப் தர்காவில் கடந்த 2 நாட்கள் உரூஸ் திருவிழா நடைபெற்றது. வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், தர்கா எதிரில் பொம்மை கடை உள்ளிட்டவற்றை வியாபாரிகள் கடை அமைத்திருந்தனர்.
தர்கா அருகே ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் பொம்மை கடை வைத்திருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அபிதா பேகம், சஹானா, இஷாத் அலி, அமுல்யா ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
வடமாநில பெண் தொழிலாளி அபிதா பேகம், 12 வயது சிறுமி சஹானா ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்த இருவருக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை.. சிகிச்சை அளிக்க விரைந்த மருத்துவ குழு