ETV Bharat / state

தருமபுரியில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி தொடக்கம்!

தருமபுரி: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி முன்னிலையில் தொடங்கியது.

தருமபுரியில் வாக்குபெட்டியகளை அனுப்பும் பணி தொடக்கம்!
author img

By

Published : Apr 17, 2019, 1:16 PM IST

தருமபுரி மக்களவைத் தொகுதி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதி என மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. அதில் காலியாக உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தொகுதிகளில் உள்ள 14 லட்சத்து 84 ஆயிரத்து 27 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1787 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,623 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி முன்னிலையில், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

மேலும் இந்தத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 460 கேரளா மாநிலக் காவலர்கள், ஐந்து பட்டாலியன் காவலர்கள், 520 முன்னாள் படைவீரர்கள், 370 ஊர்க் காவல் படையை சேர்ந்த வீரர்கள், 2600 மாவட்டக் காவல் துறையைச் சேர்ந்த வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குபெட்டியகளை அனுப்பும் பணி தொடக்கம்

Intro:TN_DPI_01_17_EVM SENDING _VIS_7204444

Body:TN_DPI_01_17_EVM SENDING _VIS_7204444

Conclusion:தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி .அரூர். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொடங்கியது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட அறையிலிருந்து தர்மபுரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி. அரசியல் கட்சியின் முகவர்கள் முன்னிலையில் மையம் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில்

 தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மேட்டூா் சட்டமன்ற தொகுதி என்ன 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 84 ஆயிரத்து 27 வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர் .ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 323 வாக்காளா்களும் பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 28 ஆயிரத்து 573 வாக்காளர்களும் மற்றவை 130 என 14 லட்சத்து 84 ஆயிரத்து 27 வாக்காளர்களை கொண்டுள்ளது .

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில்1787 வாக்குச்சாவடிகள் உள்ளன .தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 262 வாக்குசாவடிகளில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் இடைதோ்தல் நடைபெறும் அரூா் சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளில் 314 வாக்குச் சாவடிகளும் மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளில் 315 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,623 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன மாவட்டத்தில் 114 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை12 வாக்குச்சாவடிகளில் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரூா் சட்டமன்ற இடைத்தேர்தலில் 460 கேரள மாநில காவல்துறையினர் 375 பட்டாலியன் காவலர்கள் . 520 முன்னாள் படைவீரர்கள் 370 ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர்கள் . 2600 மாவட்ட காவல் துறையைச் சார்ந்த காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.