தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குள்பட்ட ஏரியூர் அருகே அண்ணா நகர், நேதாஜி நகர் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் 10 அடியாக இருந்த பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக மூன்று அடியாக சுருங்கிவிட்டதாக இப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்மின் செயல்பட்டுவருகிறது. இதற்குச் சொந்தமான பாதையைப் பயன்படுத்தினால் அங்கு வேலைபார்க்கும் அலுவலர்கள் மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் பட்டியலினத்தவர், பழங்குடியின மக்கள் என அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து வாழ்ந்துவருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களைத் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் நிலவுகிறது. சாலை வசதி கோரிக்கை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் - தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
தருமபுரி: பென்னாகரம் அருகே முறையான சாலை வசதியில்லாமல் அவதிப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.