தர்மபுரி: கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியானது. அந்த பட்டியலில், வீரப்பனின் மகளும், பாஜகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருவமான வித்யா வீரப்பன், பென்னாகரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான அப்பட்டியலை பாரதிய ஜனதா கட்சி மறுத்தது.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வித்யா வீரப்பன் பொது மக்களை சந்தித்து வருகிறார். கிராமப்பகுதிகளுக்குச் செல்லும் வித்யா வீரப்பனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளிக்கின்றனர். அவர் பென்னாகரம் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு பொதுமக்களை சந்தித்து வருவதால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வித்யா வீரப்பன் போட்டியிடுவார் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்' - அதிமுக பொதுக்குழுக் கூட்டம் புகைப்படத் தொகுப்பு