ETV Bharat / state

கலப்படமற்ற பொருள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை - விக்கிரமராஜா கோரிக்கை - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

தருமபுரி: அரசு சார்பில் கலப்படமற்ற பொருட்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

vikramaraja
vikramaraja
author img

By

Published : Nov 26, 2019, 10:08 PM IST

தருமபுரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, "தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை நகரப் பகுதியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைக்க தொடர்ந்து வணிகர்களும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் மௌனமாக உள்ளது.

வெள்ளை அறிக்கை அவசியம் தேவை

ஏற்கனவே பேருந்து நிலையம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கடையடைப்பு நடைபெற்றது. இதேபோன்று டிசம்பர் 17 ஆம் தேதி தருமபுரியில் பேருந்து நிலையம் இடமாற்றத்தை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு நடைபெறும். மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றப்படும்.

மக்களவையில் மத்திய அரசு தமிழ்நாட்டிலுள்ள 88 நிறுவனங்களில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக தெரிவித்துள்ளது. பாலில் உள்ளது போல எண்ணெய் போன்ற பல பொருட்களில் கலப்படங்கள் உள்ளன. கலப்படம் உள்ள பொருட்கள் பற்றி அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

எந்த பொருளில் தரம் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மருத்துவருக்கு சிறப்பு விருது வழங்கிய இங்கிலாந்து பாராளுமன்றம்!

Intro:tn_dpi_01_vanigersangam_vikramaraja_pressmeet_vis_7204444

Body:tn_dpi_01_vanigersangam_vikramaraja_pressmeet_vis_7204444

Conclusion:

பாலில் நச்சுத்தன்மை உள்ளது போல பல்வேறு உணவுபொருட்களில் கலப்படம் உள்ளது அரசு கலப்படமற்ற பொருட்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி. தருமபுரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா.தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை நகரப் பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைக்க தொடர்ந்து வணிகர்களும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் மவுனமாக உள்ளது ஏற்கனவே பேருந்து நிலையம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கடையடைப்பு நடைபெற்றது.அடுத்த மாதம் 17 ஆம் தேதி  தருமபுரியில் பேருந்து நிலையம் இடமாற்றத்தை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள  88 நிறுவனங்களில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக தெரிவித்துள்ளது. பாலில் உள்ளது போல எண்ணெய் போன்ற பல பொருட்களில் கலப்படங்கள் உள்ளன கலப்படம் உள்ள பொருட்கள் பற்றி அரசு ஆய்வு செய்ய வேண்டும்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வணிகர்களை சோதனை செய்து விடுகிறார்கள் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன அங்கு சோதனை செய்து தடுக்க வேண்டும் எந்த பொருளில் தரம் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் விக்கிரம ராஜா கேட்டுக்கொண்டார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.