ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்
author img

By

Published : Dec 16, 2021, 10:08 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் காரிமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 18,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உழைப்பவர்களுக்கு மரியாதை உண்டு. உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆறு மாத காலமாக சட்டப்பேரவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, இளம் வயதில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். அவர் அமைச்சராக தகுதியானவர்" என்றார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்த கேள்விக்கு, "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டம் இல்லை. இது மக்களுக்கு நன்றாக தெரியும். ஐபிஎஸ் வேலையை அண்ணாமலை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் ஏதோ எதிர்பார்த்துதான் வந்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: ஆம்பூரில் ஆட்டுத் தந்தூரி - வைரல் காணொலி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.