தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல ஹள்ளி கிராமத்தில் இன்று விநாயகர் ராமச்சந்திர மூர்த்தி சாய் பாபா ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கூட்டத்தில், சந்தேகம்படும் படி இரண்டு பெண்கள், சுவாமி தரிசனம் செய்யும் பெண்கள் கழுத்தில் கைவைத்து செயினை பறிக்க முயன்ற போது அக்கம் பக்கத்தினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அப்பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால். இருவர் மீது சந்தேகம் அடைந்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டத்தில் நடைப்பெறும் கோயில் திருவிழாவில் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பாகல ஹள்ளி கிராம கோயில் விழாவில் இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.