காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது, பேருந்து மோதியதில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (53), ஓசூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (50) ஆகிய இருவரும், தங்கள் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்புகையில், கெரகோடஅள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மீது எதிரே வந்த பேருந்து மோதியுள்ளது.
இதில், தலையில் பலத்த அடிபட்ட இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காரிமங்கலம் காவல்துறையினர், உடல்களை மீட்டு கூராய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து