ETV Bharat / state

சென்னை, திருவள்ளூரிலிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா உறுதி - சென்னையிலிருந்து திரும்பியவருக்கு கரோனா

தருமபுரி: சென்னை, திருவள்ளூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Two person affected corona returned from chennai and Thiruvallur
சென்னை, திருவள்ளூரிலிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா உறுதி
author img

By

Published : Jun 19, 2020, 7:50 AM IST

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றிவருகின்றனர்.

சென்னையில் இன்றுமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கடந்த சில நாள்களாகவே அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இதையடுத்து சென்னையிலிருந்து சொந்த ஊரான மொரப்பூர் அடுத்த அம்பாலப்பட்டி பகுதிக்குத் திரும்பிய நபருக்கும், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தருமபுரி கடத்தூர் அடுத்த குருபரஅள்ளி பகுதியைச் சேர்ந்த நபருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தற்போதுவரை தருமபுரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.